தயாநிதி மாறன் வாக்கு சேகரிப்பு !

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட எழும்பூர் தெற்கு பகுதி 61அ வட்டத்தில் உள்ள ஏகப்பன் தெரு, தொடங்கி லெப்பை தெரு, அய்யாசாமி தெரு, அய்யாசாமி தெரு குடிசை பகுதி, லெப்பை தெரு, நரியங்காடு போலீஸ் குடியிருப்பு, வரதராஜபுரம், சின்ன குழந்தை தெரு, ஆங்கிலோ இந்தியன் குடியிருப்பு ஆகிய தெருக்களில், மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்கு சேகரித்தார்.

மேலும் சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சருமான பி.கே சேகர்பாபு மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதி மாறன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

உடன் பகுதிக் கழகச் செயலாளர்கள் வி.சுதாகர், எழும்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஓ.ஏ.நாகலிங்கம், கழகச் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, கழக அயலக அணி துணைச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான பரிதி இளம்சுருதி, மாமன்ற உறுப்பினர் பாத்திமா முசப்பர், வட்டக் கழகச் செயலாளர் இ.மொய்தீன், கூட்டணிக் கட்சித் தோழர்கள் மற்றும் கழக முன்னணியினர்.

Tags

Next Story