சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் பகல்பத்து திருவிழா
காட்சி அளிக்கும் கடவுள்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் இராப்பத்து, பகல்பத்து திருவிழா நடைபெற்றது.
புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் உள்ளே உள்ள கோமளவல்லி தாயார் சமேத கோலவாமனப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் இராப்பத்து, பகல்பத்து திருவிழாவில் நேற்று முன்தினம் பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை கோலவாமனப் பெருமாள் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் எழுந்தருளி, மேற்கு புறத்தில் உள்ள பாலக்குளத்தில் சென்று கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி மங்கள வாத்யம் முழங்க, வானவேடிக்கையுடன் நடைபெற்றது.
இதில் சிக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்து இருந்தனர்.
Tags
Next Story