பெருமாள் கோவிலில் பகல்பத்து ராப்பத்து உற்ஸவம் நிகழ்வு

பெருமாள் கோவிலில் பகல்பத்து ராப்பத்து உற்ஸவம் நிகழ்வு

பெருமாள் கோயில் 

திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து - ராப்பத்து உற்ஸவம் இன்று தொடங்குகிறது

திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து - ராப்பத்து உற்ஸவம் இன்று தொடங்குகிறது.திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் 77 வது ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழாவினை முன்னிட்டு பகல்பத்து - ராப்பத்து உற்ஸவம் இன்று தொடங்கி ஜன.2 வரையில் 21 நாட்கள் நடக்கிறது.

வைகுண்ட ஏகாதசி நாளான டிச. 23 காலை 5 :00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. அன்று பகல் முழுவதும் தங்கும் பெருமாள் இரவு 8:00 மணிக்கு கருட வாகனத்தில் மூலஸ்தானம் சென்றடைகிறார்.இன்று முதல் டிச. 22 வரை பகல் பத்தும், டிச.23 முதல் ஜன. 2 ல் ராப்பத்து உற்சஸமும் நடக்கிறது.விழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடி நடக்கிறது.

Tags

Next Story