நாமக்கலில் பட்ட பகலில் திருட்டு - போலீசார் விசாரணை

நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் பட்ட பகலில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் நல்லிபாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன், இவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர், இவர் நேற்று மதியம் குடும்பத்துடன் சொந்த கிராமமான மூங்கில்பட்டியில் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் 3 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பீரோவையும் உடைத்து அதிலிருந்த 33 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 இலட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பத்மநாபன் உட்பட குடும்பத்தினர். இதுகுறித்து நல்லிபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் நாமக்கல் டி.எஸ்.பி ஆனந்தராஜ், ஆய்வாளர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். கொள்ளை நடந்த இடம் நல்லிபாளையம் முக்கிய மெயின் சாலை என்பதால் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டபகலில் வீட்டின் கதவைத் உடைத்து பீரோவில் இருந்த தங்க நகைகள், ரொக்கப்பணத்தை திருடிய சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story