திருப்பூரில் பட்டப் பகலில் துணிகரம் - நடந்து சென்ற அங்கன்வாடி பணியாளரிடம் 3 1/2 சங்கிலி பறிப்பு!

திருப்பூரில் பட்டப் பகலில் துணிகரம் -  நடந்து சென்ற அங்கன்வாடி பணியாளரிடம் 3 1/2 சங்கிலி பறிப்பு!

காவல்துறை விசாரணை


திருப்பூரில் நடந்து சென்ற அங்கன்வாடி பணியாளரிடம் 3 1/2 பவுன் சங்கிலி பறிப்பு. மோட்டார் சைக்கிளில் தப்பிய இரண்டு பேருக்கு வலை வீச்சு!
திருப்பூர்தாராபுரம் சாலை செரீப் காலனி அருகே குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் அன்னமணி (48). திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள கெம்பை நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணி முடிந்து கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து செரீப் காலனி பகுதியில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அன்னமணி திருப்பூர் தெற்கு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story