மேட்டூர் காவிரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

மேட்டூர் காவிரி ஆற்றில்  இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

கரை ஒதுங்கிய மீன்கள் 

மேட்டூர் அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் ஏராளனமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.

மேட்டூர் அணையில் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 70 லட்சம் மின் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களை உரிமம் பெற்ற 2016 மீனவர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் இன்று ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது. மேலும் மயக்கம் அடைந்த மீன்களை பரிசல் மூலம் சென்று மீனவர்கள் அள்ளி சென்றனர்.

இறந்து போன மீன்கள் பல்வேறு இடங்களில் கரை ஒதுங்கியதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதா ?அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்ததா என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story