சரவண பொய்கை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

சரவண பொய்கை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

செத்து மிதக்கும் மீன்கள் 

திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முருகக் கடவுளின் அறுவடை வீடுகளில் முதற்படை வீடானது மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். உள்ளது குடைவரைக் கோயிலான இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள சரவணப் பொய்கையில் தான் முருகன் பிறந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சரவணப் பொய்கைக்கு நீண்ட வரலாறு உண்டு. எனவே இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் இந்த சரவணப் பொய்கை குளத்தில் நீராடுவது வழக்கம்.உள்ளூரில் உள்ள பொதுமக்கள் தினமும் சரவண பொய்கையில் குளிப்பது வழக்கம்.

இந்த நிலையில் சில நாட்களாக சரவண பொய்கையில் மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இறந்த மீன்களை அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீசுவதாகவும் அதனால் குளத்திற்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்கு தயங்கி விட்டு திரும்பி செல்வதாகவும், இது சம்பந்தமாக ஏற்கனவே கோயில் நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்த நிலையில் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என்றும் அறநிலையத்துறை உடனடியாக தலையிட்டு இந்த புனித குளத்தை சரி செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story