குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு!

குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு!

 செத்து மிதந்த மீன்கள்

திண்டுக்கல் அருகே வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் அருகே பெரிய செட்டிகுளம் உள்ளது. இந்த குளத்தில் ஜிலேபி, விரால், கெண்டை, கட்லா ஆகிய மீன்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை பெரிய செட்டி குளத்தில் உள்ள கெண்டை மீன்கள் செத்து மிதந்தது. இதனால் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மீன் செத்து மிதப்பதற்கு காரணம் பருவநிலை மாற்றத்தினால், வெப்பத்தை தாங்காமல் மீன்கள் செத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. பெரிய செட்டி குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன் தெரிவித்ததாவது: தற்போது அடிக்கும் கடுமையான வெயில் தாக்கத்தால் மீன்கள் இறக்குகிறது. மேலும் குளத்தில் தண்ணீர் குறைந்தாலும் மீன்கள் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இது குறித்து விசாரணை செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story