விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் பக்தர்கள் அதிருப்தி

ஶ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் பக்தர்கள் அதிர்ச்சி. குளத்தை தூய்மையாக பராமரித்து சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி தெப்பத் திருவிழா நடக்க உள்ள நிலையில், திருமுக்குளம் தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமாக திருமுக்குளம், திருப்பாற்கடல், சர்க்கரைகுளம் ஆகிய தெப்பக்குளங்கள் உள்ளது. திருமுக்குளம் கரையில் உள்ள மண்டபத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் எண்ணெய் கப்பு உற்சவம் நடைபெறுகிறது. திருமுக்குளத்தில் மாசி பவுர்ணமி அன்று தெப்ப திருவிழா நடைபெறும். பல்வேறு காரணங்களால் 2016ம் ஆண்டிற்கு பிறகு தெப்ப திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தெப்ப திருவிழா நடத்துவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாசி பவுர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 24,25,26 ஆகிய 3 நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது. திருமுக்குளத்தில் துணி துவைப்பதால் நீர் மாசடைகிறது. இந்நிலையில் இன்று திருமுக்குளத்தில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தெப்ப திருவிழா நடக்க உள்ள நிலையில் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவது பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளம் நகரின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளதால், குளத்தை தூய்மையாக பராமரித்து சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story