இறந்தும் வாழும் கண்கள் - ஜவுளிக்கடை உரிமையாளர் கண்தானம்
கீழ்பென்னாத்தூரில் இறந்த ஜவுளிக் கடை உரிமையாளர் கண்கள் தானம்
கீழ்பென்னாத்தூரில் இறந்த ஜவுளிக் கடை உரிமையாளர் கண்கள் தானம்
கீழ்பென்னாத்தூரில் இறந்த ஜவுளிக் கடை உரிமையாளர் கண்கள் லயன்ஸ் சங்கம் மூலமாக தானமாக பெறப்பட்டு அகர்வால் கண் மருத்துவ குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஜவுளிக்கடை உரிமையாளர் ஆர். ராஜேந்திர பிரசாத் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். இவரது மகன் விபுராஜ் கீழ்பென்னாத்தூர் லயன்ஸ் சங்க செயலாளராக இருந்து வருகிறார். இதையடுத்து லயன்ஸ் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து இறந்த ராஜேந்திர பிரசாத் கண்கள் லயன்ஸ் சங்கம் மூலமாக தானமாக பெறப்பட்டு அகர்வால் கண் மருத்துவமனை குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது லயன்ஸ் சங்க தலைவர் சங்கர்,பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள்,உறுப்பினர்கள்
Next Story