கூட்டுறவு பட்டயப்பயிற்சி துணைத்தேர்வுக்கு காலக்கெடு நிர்ணயிப்பு

கூட்டுறவு பட்டயப்பயிற்சி துணைத்தேர்வுக்கு காலக்கெடு நிர்ணயிப்பு

பைல் படம் 

கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சி படிப்பிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் பழைய பாடத்திட்டத்தில் படித்து தேர்வு பெறாதவர்களுக்கு வரும் டிசம்பர் 2025க்குள் துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தஞ்சை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தெரிவித்துள்ளார்.

சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 7 பாடத்திட்டங்கள் கொண்ட முழு நேர கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சி மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப் பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. 2022 ஆம் ஆண்டு முதல் அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் புதிய பாடத்திட்டத்தின் படி 10 பாடங்கள் இரண்டு பருவ முறைகளாக பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பழைய பாடத் திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதால் பழைய பாடத்திட்டத்தினை முடிவு கட்டப்பட உள்ளது. எனவே பழைய பாடத்திட்டத்தின் 7 பாடங்கள் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கான துணைத்தேர்வுகள் வரும் டிசம்பர் 2025க்குள் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 2025க்குள் நடைபெறும் துணைத்தேர்வில் கலந்து கொள்ளாத பயிற்சியாளர்கள் இனிவரும் காலங்களில் புதிய பாடத்திட்டத்தின் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றால் மட்டுமே பட்டயச்சான்றிதழ் வழங்கப்படும். இத்தகவலை தஞ்சை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story