ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மட பீடாதிபதி

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூல் செய்ய வனத்துறையினருக்கு யார் அதிகாரம் அளித்தது என மணவாள மாமுனிகள் மட பீடாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூல் செய்ய வனத்துறையினருக்கு யார் அதிகாரம் அளித்தது என மணவாள மாமுனிகள் மட பீடாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பத்தொகுப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களுக்கு செல்லும் பக்தர்களிடம் கடந்த இரண்டு வருடங்களாக வனத்துறை சார்பில் ₹. 100 வரை வசூல் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. அரசாங்கத்தின் எந்த உத்தரவுப்படி யாரை கேட்டு வசூல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரை வசூல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து அரசாங்கத்திற்கு அவர்கள் கணக்கு தெரிவிக்க வேண்டும்.

மலையடிவாரத்தில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கார் நிறுத்துவதற்கு உண்டான கட்டணத்தில் வனத்துறையினர் பங்கு கேட்பதாக ஜியர் குற்றச்சாட்டு. இந்த உரிமையை வனத்துறையினருக்கு யார் அளித்தது என்றும் கேள்வி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வனப்பகுதிக்குள் உள்ள குல தெய்வங்களை வணங்கி வந்த மக்கள் தற்போது வழிபாடு செய்ய கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பலருக்கு குல தெய்வங்கள் வனப்பகுதிக்குள் தான் இருக்கிறது. ஆனால் இன்றுவரை வனப்பகுதிக்குள் சாலை ஓடை பாலம் போன்ற போதுமான அடிப்படை வசதிகள் கிடையாது. பாலம் அமைப்பதற்கும், சுற்றுப்புற சூழலை பராமரிப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிதி என்ன ஆனது ?

அறநிலைய துறைக்குள் ஆய்வு செய்வதற்கு முதல்வருக்கே அதிகாரம் இல்லை என சட்டம் இருக்கும்போது, அறநிலையை துறைக்கு சொந்தமான கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூல் செய்ய வனத்துறையினருக்கு யார் அதிகாரம் அளித்தது ? ஹிந்து மக்கள் கடவுளை வணங்குவதை தடுப்பதற்கான சதித்திட்டமாக தோன்றுகிறது. இது முறையான செயல் கிடையாது. இதில் தொடர்புடைய அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணித்து உரிய தண்டனை வழங்கி இடமாற்றம் செய்ய வேண்டும். இனிமேல் எந்த கட்டணமும் வசூல் செய்யக்கூடாது. ஏற்கனவே பாமர மக்கள், ஏழை மக்கள் குலதெய்வத்தை வணங்க வனப்பகுதி வரை செல்வதற்கு அதிக செலவாகிறது.

இந்த நிலையில் வனத்துறையினருக்கும் பணம் செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். இதுவரை எத்தனை லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டது என்பது கடவுளுக்கே தெரியும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பணம் வசூல் செய்வதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இன்னும் மூன்று நாட்களுக்குள் கட்டணம் ரத்து செய்யப்படவில்லை என்றால் பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வனத்துறை அலுவலகத்தில் நியாயமான வழியில் போராட்டம் நடத்தப்படும்.

மத்திய மாநில அரசுகள் ஒதுக்கிய நிதியை செலவு செய்யாமல் சதித்திட்டம் தீட்டி பக்தர்களை கோயிலுக்குள் விடாமல் ஹிந்து தர்மத்தை அளிக்கக்கூடிய சதி திட்டமாக தோன்றுகிறது. காட்டுக்குள் கெட்ட செயல் நடப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். வனப்பகுதிக்குள் ஏராளமான மது பாட்டில்கள் கிடைக்கிறது. மேலும் பலவிதமான கெட்ட காரியங்கள் நடக்கிறது. அதை வனத்துறையினர் தட்டி கேட்பதில்லை. ஆனால் பக்தர்களிடம் பணம் வசூல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். வரும் பொங்கலுக்குள் அரசாங்க ரீதியாக சட்டப்பூர்வமாக அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்யவில்லை என்றால் என் தலைமையில், பக்தர்களை ஒன்றிணைத்து வனத்துறை அலுவலகத்தில் தர்மமான முறையில் போராட்டம் நடத்தப்படும்.

உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில் அவர்களுக்கு அடிப்படை வசதியான இலவச சுகாதார வளாக வசதி இல்லையென்றும் பணம் கொடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு.. இது பற்றி பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மழுப்பளான பதிலை ஜீயர் தெரிவித்தார்.

Tags

Next Story