பேருந்தில் பயணித்த ஐ.டி.பெண் ஊழியர் உயிரிழப்பு!

பேருந்தில் பயணித்த ஐ.டி.பெண் ஊழியர் உயிரிழப்பு!

சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் பயணித்த ஐடி பெண் ஊழியர், பஸ் நின்றும் இறங்காத நிலையில், பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் பயணித்த ஐடி பெண் ஊழியர், பஸ் நின்றும் இறங்காத நிலையில், பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி. சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.கடந்த சில தினங்களாக் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் செவ்வாய் இரவு தனியார் ஆம்னி பேருந்து மூலம் கோவை திரும்பியுள்ளார்.பேருந்தில் கீழ் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று காலை பேருந்து நின்ற பிறகும் இறங்கவில்லை.

இறுதியாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரிடம் காந்திபுரம் வந்த தகவலை கூற சென்றபோது அவர் எழும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த அவர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தகவலறிந்து வந்த காட்டூர் காவல்நிலைய போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Read MoreRead Less
Next Story