கடலூரில் குழந்தைகள் நல டாக்டர் நமச்சிவாயம் உயிரிழப்பு

கடலூரில் குழந்தைகள் நல டாக்டர் நமச்சிவாயம் உயிரிழப்பு
X

குழந்தைகள் நல டாக்டர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், குழந்தைகள் நல டாக்டர் நமச்சிவாயம் வயது முதிர்வால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் நமச்சிவாயம் குழந்தைகள் நல டாக்டர் ஆவார். இவர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்தார். மூத்த டாக்டரான இவர் வயது முதிர்வு காரணமாக இறந்தார். அவரது உடல், அண்ணாநகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் கடலூர் கிளையை சேர்ந்தவர்கள், கடலூர் மாவட்ட இந்திய குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் டாக்டர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Tags

Next Story