விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யா மறைவு - கோவையில் புகழ் அஞ்சலி.

விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யா மறைவு - கோவையில்  புகழ் அஞ்சலி.

நினைவஞ்சலி ஊர்வலம் 

மறைந்த விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என் சங்கரய்யாவின் மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு சார்பில் இரங்கல் ஊர்வலம் மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15வது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான சங்கரய்யா நேற்று காலமானார்.சங்கரய்யா இறுதி ஊர்வலம் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.பெசன்ட் நகர் இடுகாட்டில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.சங்கரய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பில் இரங்கல் ஊர்வலம் மற்றும் நினைவேந்தல் பொது கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு அலுவலகத்தில் தொடங்கிய இரங்கல் ஊர்வலம் 100 அடி சாலை வழியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று சென்று சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் நிறைவுற்றது.இந்த ஊர்வலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வி.கே‌.கே.மேனன் சாலையில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் சங்கரய்யாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், கோவை மாவட்ட செயலாளர் கே.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் யு.கே சிவஞானம், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், தமிழ் புலிகள் கட்சியின் நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சங்கரய்யாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story