மேயர் தந்தை மறைவு - உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
அஞ்சலி செலுத்திய உதயநிதி
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனின் தந்தை மாரியப்பபிள்ளை உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார்.அவரது உடல் நெல்லை டவுண் சாலியர் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேயரின் தந்தை உயிரிழந்த செய்தி கேட்டு மேயர் இல்லத்திற்கு வந்த தமிழக விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் ஆகியோர் மேயரின் தந்தையின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து மேயரின் தாயார் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன்,நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன் கான் உட்பட பல்வேறு நிர்வாகிகள் மேயரின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.