தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மறைவு - ஊடகத்துறையினர் இரங்கல்

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மறைவு - ஊடகத்துறையினர் இரங்கல்

முத்தையா 

நாமக்கல் மாவட்ட ராஜ் டிவி மூத்த செய்தியாளர் வால்பாறை முத்தையா மறைவிற்கு ஊடகடத்துறையினர், அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்புகள், சங்கங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ராஜ் டிவியில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக மூத்த செய்தியாளராக பணியாற்றி வந்த வால்பாறை முத்தையா (65) 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை உடல் நலக்குறைவால் கோயமுத்தூர் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது. 65 வயதான வால்பாறை முத்தையா தனது பத்திரிகையாளர் பணியை நமது எம்ஜிஆர் நாளிதழில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிருபராக பணியை தொடங்கினார். பிறகு மக்கள் குரல், தினபூமி, தினச்சூரியன், ஆகிய நாளிதழ்களில் சிறப்பாக பணியாற்றியவர். மேலும் பல்வேறு நாளிதழுக்கு செய்திகளை எழுதி வந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் கடைக்கோடி கிராமங்கள் முதல் அன்றாடம் நடைப்பெறும் அனைத்து செய்திகளையும் பதிவு செய்துக் கொண்டிருந்த நல்ல ஊடகவியலாளர், *வளரும் இளம் பத்திரிகையாளர்களை அரவணைத்தும் அவர்களுக்கு செய்திகளை எப்படி எழுதுவது? மற்றும் மற்றவர்களிடம் எப்படி பேசுவது? போன்ற பல்வேறு விஷயங்களை சொல்லி தருவார்.அனைவரையும் அய்யா என்றே பண்புடன் அழைத்து பழகுவார். மற்றவர்களும் அவரை அய்யா என்று அழைப்பர். அவர் இன்று நம்மிடையே இல்லை. இவருக்கு பரத்காந்த் என்ற மகன் உள்ளார் இவரும் ராஜ் டிவியில் நாமக்கல் மாவட்ட கேமரா மேனாக பணியாற்றி வருகிறார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு, நண்பர்கள், ஊடக உறவுகள் என அனைவரும் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம். இறுதி சடங்கு இன்று பிற்பகல் நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள ஆண்டவர் நகர் அரசு குடியிருப்பில் நடைப்பெறுகிறது.

Tags

Next Story