மூத்த நிர்வாகி மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகி வேல்சாமி மறைவிற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்,அதிமுக கட்சியின் முன்னாள் நகர செயலாளரும், அதிமுக கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரும், மூத்த முன்னோடியுமான ஜி.வேல்சாமி தேவர், வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு செய்தியைக் கேட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த அதிமுக நிர்வாகி வேல்சாமி தேவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரும், முன்னாள் திருத்தங்கல் நகர செயலாளருமான, வேல்சாமி தேவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும், மறைந்த வேல்சாமி தேவரின் மகனும், திருத்தங்கல் மேற்கு பகுதி அதிமுக செயலாளருமான சரவணக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவிப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் கடிதம் வெளியிட்டுள்ளார்.
Next Story