விஜயகாந்த் மறைவு; தொண்டர்கள் மரியாதை

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவையொட்டி, நெல்லையில் தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான நடிகர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை சென்னை மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். அதனை தொடர்ந்து இன்று காலை நெல்லை சந்திப்பு சிந்துபுந்துறையில் வைத்து விஜய்காந்த் படத்திற்கு தேமுதிக சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story