கடம்பூர் அருகே மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் தற்கொலை
கடம்பூர் அருகே மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் கணவன் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கடம்பூர் அடுத்த பெரிய பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் இவரது மனைவி சரளா. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் சரளா உயிரிழந்த நிலையில் சென்னியப்பன் தனது மகன் ராம்குமார் உடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார நீண்ட நேரம் ஆகியும் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர் கடம்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கடம்பூர் காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது மகன் மற்றும் தந்தை ஆகியவர் இருவரும் தூக்கு மாட்டி இறந்துள்ளது தெரிய வந்தது.
உடலை கைப்பற்றிய சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.சம்பவம் குறித்து கடம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்
Tags
Next Story