விருதுநகரில் கொலை மிரட்டல்: போலீசில் புகார்
காவல் நிலையம்
விருதுநகர் பாத்திமாநகர் பகுதியைச் சார்ந்தவர் கவிதா வயது 38 இவர் வீட்டில் இருந்த பொழுது இவர் அண்ணன் மகன் ஜெய் சூர்யா என்பவர் வீட்டு வாசலில் இருந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.
அங்கு வந்த விருதுநகர் அருகே உள்ள ஆத்து மேடு பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் அருண்குமார் ஆகிய இருவரும் ஜெயசூர்யாவுடன் தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சத்தம் கேட்டு வெளியே சென்று கேட்ட கவிதாவையும் முத்து மற்றும் அருண்குமார் தகாத வார்த்தையில் பேசி தகாதவாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அங்கு இருந்த கவிதா மற்றும் அவருடைய அண்ணன் மகன் ஜெயசூர்யாவை வேறு ஏரியாவுக்கு சென்று விட வேண்டும் எனக் கூறி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது இது குறித்து பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.