நடிகைக்கு கொலை மிரட்டல்: 8 பேர்மீது வழக்குப்பதிவு

நடிகைக்கு கொலை மிரட்டல்:  8 பேர்மீது வழக்குப்பதிவு

பைல் படம் 

கொம்மடிக்கோட்டையில் நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரது இடத்தில் நுழைந்து சிசிடிவி கேமரா உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்களை எடுத்து சென்றதாக சேகரகுருவாவனவர் உள்ளிட்ட 8பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை அனுகிரகபுரத்தைச் சேர்ந்தவவர் துரைராஜ் மகள் எமி (54). திரைப்பட நடிகை, சமுக சேவகியான இவர் அதே பகுதியில் உள்ள திருமண்டலத்திற்கு சொந்தமான இடத்தில் முந்தையை பேராயர் ஜெயச்சந்திரனிடம் 28.03.2013 ஆம் ஆண்டு முறைப்படி அனுமதி பெற்றும் அவரது உத்தரவின் பேரில் தங்குவதற்கு வீடும், சமூக சேவை செய்வதற்கும், முதியோர் தங்குவதற்கு கட்டடங்கள் கட்டி சுற்றுச்சுவர் அமைத்து பராமரித்து வருகிறார்.மேலும் மரங்களும் வளர்த்து வைத்துள்ளார்.

10 சிசிடிவி கேமரா பொறுத்தி கண்காணித்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் 27ஆம்தேதி பிறகு மொபைல் கேமரா இயங்கவில்லை. அப்போது எமி சென்னையில் இருந்ததால் சொக்கன்குடியிருப்பு அந்தோணி மலையப்பன ¢என்பவர் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 9 கேமரா இல்லையெனவும், 7 பூட்டுகள் உடைப்பட்டு கிடந்ததும் , முக்கிய ஆவணங்கள், மற்றும் மின்சாதன பொருள்களை எடுத்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மறுநாள் எமி போய் பார்த்தபோது 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் ஈடுப்பட்டது சாத்தான்குளம் சேகரகுருவானவர் டேவிட் ஞானையா, கொம்மடிக்கோட்டை சுகந்தராஜா, சுரேஷ்குமார் மனைவி கற்பகவள்ளி, அவரது மகன் ரிச்சிலயனேஸ்வரன், தட்டார்மடம் சண்முகநாதன், புத்தன்தருவை குமார் மற்றும் தனபால், சாலமோன் ஆகியோர் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து எமி அவர்களிடம் கேட்டபோது அவர்கள் அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து எமி, தட்டார்மடம் காவல் நிலையத்தி்ல சனிக்கிழமை புகார் செய்தார். புகாரின் பேரில் சேகரகுரு டேவிட் ஞானையா உள்ளிட்ட 8பேர்கள் மீதும் ஏட்டு கார்த்தி அருணாசலம், 147, 448, 380 (என்பி), 427, 294(பி), 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தார். தட்டார்மடம் உதவி ஆய்வாளர் , பொன்னு முனியசாமி, காவல் ஆய்வாளர் அனிதா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story