அரசு பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல்

கீழ்வேளூர் அருகே அரசு பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

கீழ்வேளூர் அருகே அரசு பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் . முன்னாள் கணவரை போலீசார் கைது செய் தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சேத்துப்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம் மகள் சுதா(வயது 41), சித்தா டாக்டரான இவர் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா டாக்டராக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் பணிபுரிந்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வைத்தியர் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன்(45). ஆயுர் வேத மருத்துவர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு செந்த மிழ்செல்வனுக்கும், பெண் டாக்டர் சுதாவுக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 12 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2022 வருடம் சித்தா டாக்டர் சுதா நீதிமன்றம் மூலம் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இதையடுத்து 2023 பிப்ரவரி மாதம் சுதா, தேவூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். டாக்டர் சுதா தேவூரில் பணியில் சேர்ந்த நாள் முதல் தினமும் சுதாவிடம் நேரில் சென்று செந்தமிழ் செல்வன் பிரச்சினை செய்து வந்துள்ளார்.

கடந்த 2023 பிப்ரவரி மாதம் இறுதியில் சுதா ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தபோது அங்கு வந்த செந்தமிழ் செல்வன் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்தும், தரக்குறைவாக பேசியும், தன்னை அடித்து உதைத்தும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அப்போது கீழ்வேளூர் போலீசில் சுதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ் செல்வனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செந்தமிழ் செல்வன், டாக்டர் சுதா தேவூரில் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று சுதாவின் ஸ்கூட்டரை கீழே தள்ளி விட்டு அவரை கட்டிபிடித்து அநாகரிகமான முறையில் நடந்து உள்ளார்.மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து டாக்டர் சுதா கீழ்வேளூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தமிழ் செல்வனை கைது செய்தனர் ..

Tags

Next Story