டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல்

டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல்
பைல் படம்
நித்திரவிளையில் டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காவிரிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி மகன் கனகராஜ் (53). இவர் நித்திரவிளையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையில் இருக்கும் போது, அதே பகுதி பாப்பான் பழஞ்சி வீட்டில் வசிக்கும் ராஜன் மகன் ரதீஷ் (27) என்பவர் டாஸ்மாக் கடையில் வந்து தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் மேற்பார்வையாளர் கனகராஜ் - க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story