விருதுநகர் : தம்பதிக்கு கொலை மிரட்டல் - காவல்நிலையத்தில் புகார்
கணவன் மனைவி இருவரையும் தகாதவார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்தவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனி பகுதியைச் சார்ந்தவர் சாவித்திரி, இவரின் கணவர் மாரிமுத்து இவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சக்திவேல் என்பவர் சாவித்திரியின் வீட்டு வாசல் முன்பு வந்து தகாத வார்த்தையில் பேசி அவரை தாக்க கற்களால் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அங்கு வந்த சாவித்திரியின் கணவர் மாரிமுத்துவையும் தகாத வார்த்தையில் பேசிய மாரிமுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து அங்கு காவல்துறையினர் வந்ததாகவும் காவல்துறையினரை பார்த்த சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். காவல்துறையினர் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு சென்றதாகவும் பின்பு அந்த இடத்திற்கு வந்த சக்திவேல் கத்தியை காட்டி கொலை மிரட்டல் எடுத்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி சாவித்திரி அளித்த புகார் அடிப்படையில் சக்திவேல் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story