ஆம்பூரில் வி.சி.க.கட்சியினருக்கு கொலைமிரட்டல்.!

ஆம்பூரில் வி.சி.க.கட்சியினருக்கு கொலைமிரட்டல்.!

காவல்துறையிடம் மனு

ஆம்பூரில் வி.சி.க.கட்சியினருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் தலைவர் மற்றும் வன்னியநாதபுரம் பகுதியை சேர்ந்த பட்டியலின பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்த விடுதலை சிறுத்தை கட்சியினர்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்ற பட்டியலின பெண் தலைவரான இந்துமதியிற்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைக்ககோரி இந்துமதியிற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியதை கண்டித்தும், அதே போல் வன்னியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் பட்டியலின வகுப்பை சேர்ந்த இந்திரா என்பவரை திருமணம் செய்துள்ள நிலையில் அவரை வன்னியநாதபுரம் கிராம மக்கள் ஊரில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்ற கூடாது என கூறியு பாண்டுரங்கன் வீட்டில் ஏற்பட்ட துக்க நிகழ்ச்சியில் ஊர் மக்கள் யாரும் பங்கேற்காத நிலையில் விடுதலை சிறுத்தைகள் அந்த துக்கநிகழ்ச்சியில் பங்கேற்று வன்னியநாதபுர பஞ்சாயத்து நிர்வாகிகள் மீது இந்திரா உமராபாத் காவல்நிலையத்தில் தனக்கு சாதிய ரீதியாக வன்கொடுமை செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் ஆதரவுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை கண்டித்தும், பட்டியலின பெண்களுக்கு ஆதராவக செயல்பட்டதாகவும் தங்கள் சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தாக கூறி திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஓம்பிரகாஷ் மற்றும் அக்கட்சியை சேர்ந்த நபர்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனையும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு சிலர் கடிதம் அனுப்பியுள்ளனர்.. இந்நிலையில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள்கட்சியினர் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Tags

Next Story