கடன் தொல்லை - தனியார் நிறுவன ஊழியர் ஆற்றில் குதித்து தற்கொலை.
கணேசன்
சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே கோவிந்தபாடியை சேர்ந்தவர் கணேசன் (49) இவருக்கு சிவகாமி (45) என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணேசன் ஓசூரில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஓசூரில் இருந்து பேருந்து மூலம் தனது சொந்த கிராமத்திற்கு வந்து உறவினர்களை சந்தித்து விட்டு நீர் தேக்க பகுதியான பண்ணவாடி காவிரி ஆற்றுக்கு வந்தவர் திடீரென காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார் கணேசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர்.போலீசார் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக கணேசன் காவிரி ஆற்றி குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றனர்.
Next Story