குமரி வெங்கடாஜலபதி கோவிலில்  டிச.1-ந்தேதி முதல் லட்டு பிரசாதம்

குமரி வெங்கடாஜலபதி கோவிலில்  டிச.1-ந்தேதி முதல் லட்டு பிரசாதம்
X
லட்டு பிரசாதம்
கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை அன்று பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் திருப்பதி லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்பட உள்ளது. படிப்படியாக வாரந்தோறும் லட்டு பிரசாதம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். லட்டு ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும். கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வருகிற ஜனவரி மாதம் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பதியில் நடப்பது போன்று 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடத்தப்படும். இதற்காக சுவாமிகள் பவனி வருவதற்கான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story