நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 27வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகரில் சுமார் 50 வருடங்களாக 150 குடும்பங்கள் வீடுகள் கட்டி குடும்பத்துடன் வசித்துவருகின்றனர். சுமார் 3.79 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த பகுதியானது நீர்பிடி நிலம் அல்ல என பொதுப்பணித்துறை சேலம், தருமபுரி மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் 09.09.1991 அன்று அரசுக்கு தெரிவித்ததின் அடிப்படையில் 64 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்ட வழங்கப்பட்டது.
மீதமுள்ள 85 குடும்பத்தினர் பட்டா வாங்க தவறிவிட்டனர்.(அரசு நிர்ணயித்த 1 சென்ட் அடி நிலத்திற்கு சற்று கூடுதலாக இருந்ததால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த இயலாத காரணத்தால் 85 குடும்பத்தினர் வீட்டுமனைப்பட்டா வாங்க தவறிவிட்டனர். தற்போது தமிழக முதலமைச்சர் அவர்கள் 11/2 சென்ட் அளவிலுள்ள ஏழை எளிய குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க ஆணை பிறப்பித்ததின் அடிப்படையில் எங்கள் பகுதியை அரசு சார்பில் அளவீடு செய்து முடித்துள்ளனர். வருவாய் துறை மூலம் இலவச பட்டாப்பெற தகுதியான 150 குடும்பத்தினரை தேர்வு செய்துள்ளனர். மற்றபகுதிகளில் பட்டாக்கள் வழங்கிவரும் நிலையில் எங்கள் பகுதியான காமராஜர் நகர் பகுதி பொதுமக்களுக்கும் காலதாமதம் செய்யாமல் இலவச பட்டா கிடைக்க ஆவண செய்ய வேண்டும் எனக்கோரி ராசிபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் அப்பகுதி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்த் துறையினர் மற்றும் ராசிபுரம் டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தையை அடுத்து கலந்துச் சென்றனர்கலந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த நல்வினை செல்வராஜ் என்பவர் கூறுகையில், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க ஆணை பிறப்பித்ததின் அடிப்படையில் எங்கள் பகுதியை அரசு சார்பில் அளவீடு செய்து முடித்து, வருவாய் துறை மூலம் இலவச பட்டாப்பெற தகுதியான 150 குடும்பத்தினரை தேர்வு செய்து அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால், கடந்த 17ம் தேதி வழங்க வேண்டிய பட்டாவை ஏனோ வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம். ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி கட்டி எங்களது வாக்காளர் அடையாள அட்டையை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்துவோம் என்றார். பேட்டி உள்ளது: 1. நல்வினைச் செல்வன், 2. சசிகலா, காமராஜ் நகர் மக்கள்.