பஸ் மறியல் போராட்டம் நடத்த முடிவு

பஸ் மறியல் போராட்டம் நடத்த முடிவு

கோமாளிபட்டியில் நடந்த கம்யூ., கட்சிக் கூட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மறியல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கோமாளிபட்டியில் நடந்த கம்யூ., கட்சிக் கூட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மறியல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோமாளிபட்டி கிளைக் கூட்டம் இன்று கருப்பையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு விசாரணை மாநில தலைவர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் மருது, தெற்கு ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு, வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் கிளையில் உள்ள அனைத்து தோழர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சக்கந்தியிலிருந்து கோமாளிபட்டி வரை வந்து செல்லக்கூடிய தார் சாலை பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இதுவரை அரசிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்காதை கண்டித்தும் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்ல பயன்படுத்தி வந்த அரசு பேருந்து கடந்த ஒரு ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பஸ் மறியல் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது

Tags

Next Story