நீர்வரத்து அதிகரிப்பதால் உபரி நீரை அதிகரிக்க முடிவு

நீர்வரத்து அதிகரிப்பதால் உபரி நீரை அதிகரிக்க முடிவு

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஏரியில் திறந்துவிடும் உபரி அளவை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நேற்று முதல் மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்க தொடங்கியது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று 25 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயரம் 22.5 அடியும், மொத்த கொள்ளளவு 3132 மில்லியன் கன அடி, நீர்வரத்து 497 கன அடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை தாண்டியதாலும் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் உபரிநீர் திறப்பது மேலும் அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்று காலை முதல் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் ஏற்கனவே உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பிய நிலையில் இருப்பதால் இன்று முதல் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது.

எனவே ஏரிக்கு வரும் வரை அப்படியே வெளியேற்றும் அதிகாரிகள் முடிவு செய்து ஆலோசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக உபரி நீர் சென்று கொண்டிருந்த நிலையில் மழை நின்ற தன் காரணமாக ஏரியில் இருந்து உபநீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

ஏரிலிருந்து ஒவ்வொரு நேர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில் தற்போது இந்த ஆண்டின் தொடக்கத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் உபரி திறந்து விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story