மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு.

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4207 கன அடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 4,855 கன அடியிலிருந்து 4,207 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.50 அடியில் இருந்து 50.99 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 18.44 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story