மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது; நீர்வரத்து வரத்து வினாடிக்கு 1,583 கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது;அணைக்கு நீர்வரத்து வரத்து வினாடிக்கு 1,583 கன அடியாக உள்ளது.
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,896 கன அடியில் இருந்து இன்று 1,583 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.18 அடியில் இருந்து 70.30 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 32.95 டி.எம்.சி, யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story