எடப்பாடியில் பத்திரபதிவு அலுவலகம் முற்றுகை

எடப்பாடியில் பத்திர பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி (சார் பதிவாளர்) பத்திரப்பதிவு அலுவலகத்தில், போலியான ஆவணங்களை கொண்டு பத்திர பதிவு செய்து நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நில உரிமையாளர் தங்கள் வாரிசுதாரர்களுடன் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

எடப்பாடி அடுத்த பொன்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் இவர் மற்றும் இவரது உறவினர்களான வெங்கடேஷ், ஈஸ்வரி ஆகியோருக்கு சொந்தமான சுமார் 27 சென்ட் விவசாய பூமி கோனேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமத்தில் உள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தை கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிலர் எடப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று பிற்பகல் திடீரென அலுவலகத்திற்கு வந்த தங்கம் மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட நிலம் தங்கள் பாத்தியத்தில் இருப்பதாகவும்,

இதை வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு தவறான ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் பெயருக்கு கிரயம் செய்து கொண்டுள்ளது தெரிய வருவது நிலையில் சம்பந்தப்பட்ட கிரையத்தினை ரத்து செய்வதன் மேற்படி கிரயத்திற்கு விடுதலையாக இருந்த அலுவலர்கள் மற்றும் பாத்திர வழித்தடம் இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி திடீரென பத்திர பதிவு அலுவலகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எடப்பாடி போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி இது குறித்து சேலத்தில் உள்ள இணை பதிவாளரை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினர் இதனால் தங்கம் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திடீரென பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Tags

Next Story