சீமைக்கருவேல மரங்களால் புதர் மண்டிய மயானம்

சீமைக்கருவேல மரங்களால் புதர் மண்டிய மயானம்

 காஞ்சிபுரம் அடுத்த, வேளியூர் ஏரிக்கரையோரமுள்ள மயானம் புதர்கள் சூழந்தநிலையில் காடு போல காட்சியளிக்கிறது.

காஞ்சிபுரம் அடுத்த, வேளியூர் ஏரிக்கரையோரமுள்ள மயானம் புதர்கள் சூழந்தநிலையில் காடு போல காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் அடுத்த, வேளியூர் ஏரிக்கரையோரம், காலனி சுடுகாடு உள்ளது. எரிமேடை, சுற்றுச்சுவர், கை பம்பு ஆகிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுஉள்ளன. இங்கு, வேளியூர் காலனியைச் சேர்ந்தவர்களின் உடலை புதைக்கவும், எரிக்கவும் செய்கின்றனர். இந்த சுடுகாடு, போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால், சீமைக்கருவேல மரங்களால் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், உடலை எடுத்து செல்லும் போது, இடையூறு ஏற்படுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம், வேளியூர் ஏரிக்கரையோரம் உள்ள சுடுகாட்டில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story