தீப திருவிழா : திருவண்ணாமலையில் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்

தீப திருவிழா : திருவண்ணாமலையில் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்

அன்னதானம் 

திருவண்ணாமலையில் நேற்று பரணி மற்றும் மகாதீபத்தையொட்டி 50 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் 14 கி.மீ. தூரமுள்ள மலையை வலம் வந்து மகாதீபத்தை வழிபட்டனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டன.

ஆணாய்பிறந்தான் ஊராட்சிக்குஉட்பட்ட கிரிவல பாதையில் துர்வாசர் கோயில் அருகில் கிருஷ்ணகிரி அருள்மிகு அண்ணாமலையார் அன்னதான சங்கம் சார்பில் 27-வது ஆண்டாக அன்னதானம் நேற்று வழங்கப்பட்டது. அருள்மிகு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் அன்னதான குழுவின் தலைவரும், ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்ற தலைவருமான தர்மராஜ் அன்னதானம் வழங்குதலை துவக்கி வைத்தார்.

26-ந் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் பவுர்ணமி தினமான 27ந் தேதிவரை ஒன்றரை நாட்கள் இட்லி, பொங்கல், வடை, சாம்பார், ரசம், மோர் மற்றும் கூட்டு, பொரியல், சிறுதானிய உணவு வகைகள் என 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த வருடம் முதன்முறையாக குழந்தைகளின் பசியை போக்கிடும் வகையில் புட்டிபால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அருள்மிகு அண்ணாமலையார்,உண்ணாமலையம்மன் அன்னதானம் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர்கள் பழனி, செயலாளர் கருணாநிதி, பொருளாளர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 25 வார்டு நகரமன்ற உறுப்பினர் ஸ்ரீதேவிபழனி மற்றும் முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக அண்ணாமலையார், உண்ணாமலையார் படம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 2 நாளாக கிருஷ்ணகிரி அருள்மிகு அண்ணாமலையார் அன்னதான சங்கத்தினர் மக்களின் பசிப்பிணியை போக்க அன்னதானம் வழங்கியதை பக்தர்கள் பலர் பாராட்டினர்.

Tags

Next Story