ரயிலில் அடிபட்டு 3 மான்கள் பலி

ரயிலில் அடிபட்டு 3 மான்கள் பலி

மான் பலி

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தொகுதியில் ரயிலில் அடிபட்டு 3 மான்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் அருகே வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மான்கள் மற்றும் இதர வனவிலங்குகள் உள்ளன.தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகிலுள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை மான்கள் கடந்து செல்ல சென்றன.அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு 3 மான்கள் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து ரயில்வே துறையினர் மான்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story