மலைகோட்டாலம் காட்டில் மான் வேட்டை: வனத்துறையினர் விசாரணை
கோப்பு படம்
மலைகோட்டாலம் காட்டில் மான் வேட்டையாடிய நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் காப்புக்காட்டு பகுதியில் வனவர் முருகன் கடந்த 19ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கே மானின் தோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மான் வேட்டையாடிய நபர்கள் இறைச்சியை எடுத்துக்கொண்டு தோலை வீசி சென்றது தெரியவந்தது. மான் தோலை மீட்ட கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் பாலு அதனை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் சமர்ப்பித்தார்.
மேலும் மான் வேட்டையாடிய நபர்கள் குறித்து விசாரிக்க வனச்சரக அலுவலர் பாலு, கள்ளக்குறிச்சி போலீசாரின் உதவியை நாடினார். போலீசாரின் விசாரணையில், அப்பகுதியில் மொபைல் போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில் இந்த சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து வனத்துறையினர் போலீசாரின் உதவியுடன் மான் வேட்டையாடிய 4 பேர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
Next Story