முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது அவதூறு வழக்கு

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது அவதூறு வழக்கு

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது அவதூறு வழக்கு

அடுத்த மாதம் சிவி சண்முகம் ஆஜராக உத்தரவிட்டுள்ளது

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் கடந்த ஜூன் மாதம் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார். ஏற்கனவே சி.வி.சண்முகம் எம்.பி. மீது 3 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு அவை விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வருகிற நிலையில் தற்போது அவர் மீது 4-வதாக மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story