அவதூறு வழக்கு : விழுப்புரம் கோர்ட்டில் சி.வி.சண்முகம் ஆஜர்.

அவதூறு வழக்கு : விழுப்புரம் கோர்ட்டில் சி.வி.சண்முகம்  ஆஜர்.

விழுப்புரம் கோர்ட்டில் சி.வி.சண்முகம்  

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார்.

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் கடந்த 28.2.2022 அன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், 25.7.2022 அன்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட சி.வி.சண்முகம் எம்.பி., தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது

. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் 18.9.2022 அன்று திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் எம்.பி., சக்கரபாணி எம்.எல்.ஏ. ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த 3 வழக்குகளும் விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது சி.வி.சண்முகம் எம்.பி. நேரில் ஆஜராகினார். சக்கரபாணி எம்.எல்.ஏ. ஆஜராகவில்லை.

அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அரசு வக்கீல்கள் ஜெயப்பிரகாஷ், ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோர் ஆஜராகி மனு தாக்கல் செய்தனர். மேலும் இந்த 3 அவதூறு வழக்குகளையும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி அந்த உத்தரவு நகலை வக்கீல்கள் சமர்ப்பித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராதிகா, இவ்வழக்குகளின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூன்) 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags

Next Story