பைக்கில் குறைபாடு: புதிய பைக் வழங்க ஆணையம் உத்தரவு

பைக்கில் குறைபாடு: புதிய பைக் வழங்க ஆணையம் உத்தரவு

பைல் படம் 

சேவைக் குறைபாடு காரணமாக புதிய இரு சக்கர வாகனம் மற்றும் 30,000 ரூபாய் இழப்பீடு ஆகியவற்றை இரு சக்கர விற்பனையாளர் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் என்பவர் தூத்துக்குடி எட்டயாபுரம் சாலையிலுள்ள இருசக்கர விற்பனையாளரிடம் வாகனம் வாங்கியுள்ளார். 3 சர்வீஸ் முடிந்த ஒரு வாரத்தில் கிராங் சாப்ட் என்ற முக்கியமான உதிரி பாகம் செயலிழந்து நிலையில் மீண்டும் சர்வீஸ்க்கு விட்டுள்ளார். சரி செய்து கொடுத்த 2 நாட்களில் மறுபடியும் அதே பிரச்சினை எழுந்துள்ளது. உடனே மேற்படி இரு சக்கர வாகனத்தை மாற்றித் தருமாறு மனுதாரர் கூறியுள்ளார்.

அதற்கு எதிர் மனுதாரர் இந்த பிரச்சினை சரியாகி விடும் என்று மழுப்பலான பதில் கூறியுள்ளார். வாகனத்தின் உற்பத்திலேயே குறைபாடு உள்ளதால் மன உளைச்சலுக்கு ஆளான பொன்ராஜ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பழுதான இரு சக்கர வாகனத்திற்கு பதில் புதிய இரு சக்கர வாகனம், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 25 ஆயிரம் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 30 ஆயிரத்தை இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.

Tags

Next Story