சேவைக் குறைபாடு : இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு : இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்டஈடு வழங்க  உத்தரவு

நீதிமன்றம் 

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.5,81,458 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தூத்துக்குடியைச் சார்ந்த ஜோ வில்லவராயர் என்பவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் மூத்த குடிமக்கள் ரெட் கார்ப்பட் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் தனக்கு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்காக பணம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதில் ஒரு பகுதியை மட்டும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது

. மீதி பணத்தையும் தருமாறு கேட்டதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட தொகை ரூ.5,46,458 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.25,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.5,81,458 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags

Next Story