சேலம் பத்மவாணி மகளிர் கல்லூரியில் 2,600 மாணவிகளுக்கு பட்டங்கள்
பட்டமளிப்பு விழா
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் உள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பத்மவாணி கல்வியியல் கல்லூரி, கே.எஸ். கல்வியியல் கல்லூரி ஆகியவை சார்பில் 15 மற்றும் 16-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எஸ்.சத்தியமூர்த்தி, செயலாளர் கே.துரைசாமி ஆகியோர் தலைமை தலைமை தாங்கினர்.
பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆர்.கிருஷ்ணராஜ் வரவேற்றார். பத்மவாணி கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்துக்குமார், கே.எஸ். கல்வியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக டெல்லி யு.ஜி.சி. ஆட்சி குழு உறுப்பினரும் சென்னை கல்வியியல் கல்லூரி முன்னாள் துணைவேந்தருமான பஞ்சநாதம், கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் 5 மாணவிகளுக்கு தங்க பதக்கம் மற்றும் பெரியார் பல்கலைக்கழக அளவில் 38 மாணவிகளுக்கு ரேங்க் பதக்கம் என மொத்தம் 2,600 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் தங்கப்பதக்கம் மற்றும் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற மாணவிகளுக்கு பத்மவாணி கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை சார்பில் ரூ.1.85 லட்சம் மதிப்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.