வணிக கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க காலதாமதம்: நடவடிக்கை

வணிக கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க காலதாமதம்: நடவடிக்கை

மேயருடன் ஆலோசனை 

தூத்துக்குடியில் வணிக கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று ஒப்பந்ததாரர்களிடம் மேயர் உறுதி அளித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிக கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தூத்துக்குடி மாவட்ட மின் இணைப்பாளர் நலச்சங்கத்தின் உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர்கள் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடனடியாக அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி அளித்துள்ளார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட தலைவர் முத்துராஜ், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story