வெள்ளியணையில் உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

வெள்ளியணையில் உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

கோரிக்கை வைத்த மக்கள்

வெள்ளியணையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை, வடபாகம், வெங்கடாபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் அப்பகுதி மக்கள் வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்.

இதனை அறிந்த வெள்ளியணை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அவர்கள் தங்குவதற்கு வெள்ளியணை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட ராமலிங்கம் மனைவி முனியம்மாள் செய்தியாளரிடம் கூறும்போது, ஒவ்வொரு முறையும் கனத்த மழை பெய்யும் போதெல்லாம் இதே நிலை ஏற்படுகிறது.

வெங்கடாபுரத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வெள்ளநீர் பாதிக்காத வகையில் தடுப்பு சுவர் கட்டி தருவதாக தீர்மானமும் இயற்றினார். ஆனால் இதுவரை தடுப்பு சுவர் கட்டப்படவில்லை. நேற்று பெய்த மழையில் எங்களுடைய ஆதார், குடும்ப அட்டை, பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்கள்,

அரசு ஆவணங்கள் என அனைத்தும் மழை நீர் அடித்துச் சென்று விட்டது. தற்போது உடுத்த உடை கூட இல்லாமல் நிற்கதியாக நிற்கிறோம். எனவே அரசு எங்களுக்கு தேவையான உதவிகளை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story