மாணவ விடுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கோரிக்கை
மாணவர் விடுதி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதுப்பாளையம் பேரூராட்சி காவல் நிலையம் அருகே ஆதிதிராவிட மாணவர் விடுதி அமைந்துள்ளது. இதில் சுமார் 50 மாணவிகள் வெளியூரிலிருந்து வந்து தங்கி பயின்று வருகிறார்கள்.
இவர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் முறையாக உணவு தயாரித்து வழங்கப்படுவதில்லை. மேலும் இவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. தற்போது மழை மற்றும் கடுமையான பனிக்காலம் என்பதால் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் இரவில் மாணவிகள் நிம்மதியாக உறங்க முடியாத நிலை உள்ளது. இந்த விடுதியில் பணிபுரியும் காப்பாளர் உள்ளே பணியாற்றும் பணியாளரிடம் தேவையான பொருட்களை 15 நாட்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்.
யாராவது கேட்டால் சற்று முன் தான் திருவண்ணாமலைக்கு மாவட்ட அலுவலகத்திற்கு சென்று இருப்பதாக கூறுங்கள் என்று சொல்லி விடுகிறார் இவரை எப்போதாவது ஒருமுறை மட்டுமே பார்க்க முடிகிறது எங்கள் வீட்டில் போதுமான வசதி இல்லாததால் விடுதியில் தங்கி பயின்று வருகிறோம். இங்கு உள்ள குறைகளை விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் குமுறி வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விடுதியில் தங்கி உள்ள மாணவர்களை விசாரிக்காமல் அருகில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் விசாரித்து விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.