சூளகிரி -சின்னார் அணை குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை

சூளகிரி -சின்னார் அணை குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை

உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை

சூளகிரி -சின்னார் அணை குறுக்கே கிராமத்திற்கு செல்ல உயர்மட்ட மேம்பாலம் எப்போது அமைக்கப்படும் கிராம மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த போகிப்புரம் என்ற கிராமம் அமைந்துள்ளது இந்த கிராமம் சூளகிரி - சின்னார் என்ற அணைக்கு நடுவே அமைந்துள்ளது இந்த கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த அணையின் குறுக்கே கிராமத்திற்கு செல்ல 2020 - 21 சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2.15 கோடி மதிப்பீட்டில் சுமார் 400 மீட்டர் தொலைவிற்கு அணையின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

சுமார் 40 ஆண்டுகளாக போகிபுரம் கிராம மக்களின் அணையின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைத்திட கோரிக்கையாகும் இந்த நிலையில் கடந்த 1 மாதமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் கிராம மக்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பிற்க்கு உள்ளாகி வருகிறது..

தன் சம்மந்தமாக கிராம மக்கள் தெரிவிக்கையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன, மேலும் பருவமழை காலங்களில் கனமழை பெய்தால் ஆற்றை கடக்க பரிசல் தான் பயன்படுத்த வேண்டும் இந்த நிலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story