அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை.

அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை.
X

மனு அளிக்க வந்த பாஜகவினர் 

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பொதுமக்கள் சார்பில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபுவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் குரும்பலூர் பேரூராட்சி 7வது வார்டு ஆலமரம் அருகே உள்ள அங்கன்வாடி மையம் பழுதடைந்து தரை உள்வாங்கியதால் பயன்படுத்த முடியாமல் போனது இதனால் தற்போது அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதே போல் கவுல் பாளையம் எம் பி சி காலனி பொதுமக்கள் சார்பில் பாரதிய ஜனதா கட்சியினர் கொடுத்த மனுவில் கவுல்பாளையம் எம் பி சி காலனியில வசிக்கும் 200க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு கடந்த 2000 ஆண்டில் பெரம்பலூர் தனி தாசில்தார் மூலம் டி கார்டு பட்டா வழங்கப்பட்டது. பின்னர் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் வழங்கப்படாத நிரந்தரப்பட்டவை வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது

Tags

Next Story