விவசாய நிலங்களுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றக் கோரிக்கை
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் சாயமலை-2 ஊராட்சியில் உள்ளது மேலசிவகாமியாபுரம். இந்தக் கிராமத்தில் உள்ள ரிஷிபன்குளம் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த கன மழையின் காரணமாக பெருகி உபரிநீா் வெளியேறியது.
இதனால், உளுந்து, பாசி, மக்காச்சோளம் பயிரிட்டிருந்த விவசாய நிலங்களை உபரி நீா் சூழ்ந்தது. இதன்காரணமாக அங்கு சாகுபடி செய்திருந்த சுமாா் 30 ஏக்கா் பயிா்கள் பாதிப்புக்குள்ளாகின. இது தொடா்பாக அப்பகுதி மக்கள், திருவேங்கடம் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து குளத்தில் இருந்து நீா் வெளியேறாமல் இருக்க அந்தப் பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் விவசாய நிலத்தில் தேங்கியுள்ள நீரை உறிஞ்சி வெளியேற்றி பயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.