அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க கோரிக்கை

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க கோரிக்கை

தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில மாநாடு

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. சங்க பொதுச்செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி, பொருளாளர் நடராஜன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநாட்டில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கொள்ளப்பட்டது.

அங்கன்வாடி மையங்களுக்கு கியாஸ் சிலிண்டர், மளிகை பொருட்கள் கூட்டுறவுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நேரடியாக வழங்கப்படும் என்று அறிவித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. குழந்தை வளர்ச்சி திட்டத்திற்கு நிதியை குறைத்து வரும் மத்திய அரசை கண்டித்தல். அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை அரசு பணியாளர்களாக்கி காலமுறை ஊதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். வெப்பத்தை எதிர் நோக்கி உள்ள சூழலில் வரும் ஆண்டுகளில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் மே மாதம் முழுவதும் அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும்.அங்கன்வாடி மையங்கள் தவிர மற்ற பணிகளுக்கு, அங்கன்வாடி பணியாளர்களை பயன்படுத்தும் முறையை கைவிட வேண்டும். சேதமடைந்த மையங்களை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சங்க தலைவர் பத்மம்மா, பொருளாளர் கோமளா, துணை பொதுச்செயலாளர் விஜயா, துணைத்தலைவர்கள் விமலா, நளினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story